போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரொருவரின் நண்பர் கைது
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரான கொண்டாயா என்ற ரஞ்சித் குமாராவின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ருவான் குமலா என்ற 'படகம குடு ருவான் என்பவரே 1.5 கிராம் ஹெரோயின் மற்றும் 10 பவுண் தங்க நகைகளுடன் ஜா-எலாவில் உள்ள காண்டேவத்தயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களுக்குள் சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கந்தானை மற்றும் ஜா-எலா பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூசா சிறையில் இருக்கும் கொண்டயாவால் இவர் இயக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.